Friday, 8 August 2014

திருப்பலி செபங்கள்



(குரு திருநீரைத் தெளிக்கும்போது கீழ்கண்ட பாடலைப் படலாம்)
ஆண்டவரேஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர் நானும் தூய்மையாவேன்
நீரே என்னைக் கழுவ நானும் உறைபனிதனிலும் வெண்மையாவேன் இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கு ஏற்ப என்மேல் இரக்கம் கொள்வீர் பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய்ப் பெருக ஆதியில் இருந்தது போல இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்.
-----
(பாஸ்கு காலத்தில் மட்டும்)
தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன் - அல்லேலூயா
அந்தததண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்றுக் கூறுவர்:
அல்லேலூயாஅல்லேலூயா.ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய் பெறுக ஆதியில் இருந்ததுபோல் இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்

எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதர சகோதரிகளேஉங்களிடமும் நான் பாவியென்று 
ஏற்றுக் கொள்கிறேன்ஏனெனில் . என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். ( பிழை தட்டிக் கொண்டு ) என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே ஆகையால்எப்போதும் கன்னியான தூய கன்னிமரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளேஉங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.
குரு : ஆண்டவரேஇரக்கமாயிரும்.
மக் : ஆண்டவரேஇரக்கமாயிரும்.
குரு : கிறிஸ்துவேஇரக்கமாயிரும்
மக் : கிறிஸ்துவேஇரக்கமாயிரும்.
குரு: ஆண்டவரேஇரக்கமாயிரும்.
மக் : ஆண்டவரேஇரக்கமாயிரும்.
வானவர் கீதம்:
(திருநாட்களில்)
உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுகபூவுலகில் நல் மனத்தோருக்கு அமைதியும் ஆகுகஉம்மைப் புகழ்கின்றோம்உம்மை வாழ்த்துகின்றோம்உம்மை ஆராதிக்கின்றோம்உம்மை மகிமைப்படுத்துகின்றோம்உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்ஆண்டவராகிய சர்வேசுரா வானுலக அரசரேஎல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா.
ஏக சுதனாய் செனித்த ஆண்டவரேஇயேசு கிறிஸ்துவே ஆண்டவராகிய சர்வேசுராசர்வேசுரனின் செம்மறியேபிதாவின் சுதனேஉலகின் பாவங்களைப் போக்குபவரேஎங்கள் மேல் இரக்கமாயிரும்உலகின் பாவங்களைப் போக்குபவரேஎங்கள் மன்றாட்டை ஏற்றருளும்பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்ஏனெனில் இயேசுக்கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர்நீர் ஒருவரே ஆண்டவர்நீர் ஒருவரே உன்னதர் பரிசுத்த ஆவியோடுபிதாவாகிய சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே. - ஆமென்.
(பாடல் திருப்பலியில்)
உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக.
உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம்.
உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்.
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே.
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே.
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.
ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.
தந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர்.
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்.
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்.
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே -ஆமென்

விசுவாச அறிக்கை (ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும்):

விசுவாச அறிக்கை (பாடல் திருப்பலியில்) :
வானமும் பூமியும் படைத்தவராம் கடவுள் ஒருவர் இருக்கின்றார்
தந்தை சுதன் தூய ஆவியுமாய் தன்னில் உறவுடன் வாழ்கின்றார்.
பரிசுத்த ஆவியின் வல்லமையால் திருமகன் மரியிடம் மனுவானார்.
மனிதரைப் புனிதராய் மாற்றிடவே புனிதராம் கடவுள் மனிதரானார்.
பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார் கல்லறை ஒன்றில் அடக்கப்படடார்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் மரணத்தின் மீதே வெற்றி கொண்டார்.
பரலோகம் வாழும் தந்தையிடம் அரியணை கொண்டு இருக்கின்றார்.
உலகம் முடியும் காலத்திலே நடுவராய் திரும்பவும் வந்திடுவார்.
பரிசுத்த ஆவியை நம்புகிறோம் பாரினில் அவர் துணை வேண்டிடுவோம்
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்றுப் பரிகார வாழ்வில் இணைந்திடுவோம்.
திருச்சபை உரைப்பதை நம்புகிறோம் புனிதர்கள் உறவை நம்புகிறோம்
சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை விசுவாசப் பொருளாய் நம்புகிறோம் - ஆமென்.

குரு : சகோதரர் சகோதரிகளேநாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள்.
மக் : ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும்மகிமைக்காகவும்நமது நன்மைக்காகவும்தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும்உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவுலகின் தேவனாகிய ஆண்டவர் வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர் பெற்றவர் - உன்னதங்களிலே ஓசானா உன்னதங்களிலே ஓசானா.
(பாடல்)
தூயவர் தூயவர் தூயவர்மூவுல கிறைவனாம் ஆண்டவர்
வானமும் வையமும் யாவும்னும் மாட்சிமையால் நிறைந் துள்ளன.
உன்னதங்களிலே ஓசான்னாஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே
உன்னதங்களிலே ஓசான்னாஉன்னதங்களிலே ஓசான்னா!

குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டுஇறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

மக் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்ஆமென்.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ,எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
(பாடல் திருப்பலியில்)
உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எம் மேல் இரக்கம் வையும்
உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எம் மேல் இரக்கம் வையும்
உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எமக்கு அமைதி அருளும்.