செபமாலை



சிலுவை அடையாளம்
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்

தூய ஆவி செபம் 

பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். 
தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். 
உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்தின் சுகமே, வெயிலின் குளிர்ச்சியே, அழுகையின் தேற்றரவே எழுந்தருளி வாரும்.
 வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற பிரகாசமே உமது விசுவாசிகளுடைய இதயங்களின் உற்பனங்களை நிரப்பும். 
உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. 
அசுத்தமாயிருக்கிரதைச் சுத்தம் பண்ணும்.
உலர்ந்ததை நனையும். 
நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். 
வணங்காதை வணங்கப் பண்ணும். 
குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். 
தவறினதை செம்மையாய் நடத்தும். 
உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழும்  கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.

துவக்க செபம் 
அளவில்லாத சகல நன்மையும் சுரூபியாயிருக்கிற சர்வேசுவரா சுவாமி நீச மனிதருமாய் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள் மட்டில்லாத மகிமைப் பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திரு சந்நிதியிலே இருந்து செபம் பண்ண பாத்திரமாகாதவர்களாயிருந்தாலும் தேவரீருடையஅளவில்லாத தயையை நம்பிக் கொண்டு ,தேவரீருக்கு ஸ்துதி வணக்கமாகவும் புனித தேவமாதாவுக்குத் தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணிச் செபம் பண்ண ஆசையாயிருக்கிறோம் . இந்தச் செபத்தை பக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசை கட்டளை பண்ணியருளும் சுவாமி . ஆமென் .

விசுவாச அறிக்கை

1. பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கின்றேன்.
2. அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.
3. இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.
4. போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
5. பாதளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
6. பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
7. அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
8. பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.
9. பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்; அர்ச்சியசிஸ்டவர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன்.
10. பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன்.
11. சரீர உத்தானத்தை விசுவசிக்கின்றேன்.
12. நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன்.
- ஆமென்.

விசுவாச அறிக்கை: புதிய தமிழ்ப் பெயர்ப்பு

1. விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன்.
2. அவருடைய ஒரே மகனாகிய / நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன்.
3. இவர் தூய ஆவியாரால் கருவாகி / தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
4. பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில் அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.
5. பாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள் / இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
6. விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
7. அவ்விடத்திலிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் / தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.
8. தூய ஆவியாரை நம்புகிறேன்.
9. தூய  கத்தோலிக்கத் திருச்சபையையும்/ புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன்.
10. பாவ மன்னிப்பை நம்புகிறேன்.
11. உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.
12. நிலை வாழ்வை நம்புகிறேன்.
- ஆமென்.

கிறிஸ்து கற்பித்த செபம்
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக;
உம்முடைய இராச்சியம் வருக;
உம்முடைய சித்தம்


பரலோகத்தில் செய்யப்படுவது போல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை
எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை
நாங்கள் பொருப்பது போல
எங்கள் பாவங்களைப் பொருத்தருளும்.
எங்களை சோதனையில் விழவிடாதேயும்,
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.


கிறிஸ்து கற்பித்த செபம் (புதிய வடிவம்)

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம்
விண்ணுலகில் நிறைவேறுவது போல
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்

அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சியசிஷ்ட மரியாயே,
சர்வேசுவரனுடைய மாதாவே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும்
வேண்டிக்கொள்ளும். - ஆமென்.


மங்கள வார்த்தை செபம் (புதிய வடிவம்)

அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க!
ஆண்டவர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசி பெற்றவரே.
தூய மரியே,
இறைவனின் தாயே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும்
வேண்டிக்கொள்ளும். - ஆமென்.

திரித்துவப் புகழ்

பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்
மகிமை உண்டாவதாக.
ஆதியிலே இருந்தது போல
இப்பொழுதும் எப்பொழுதும்
என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

திரித்துவப் புகழ்(புதிய வடிவம்)

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்
மாட்சிமை உண்டாகுக.
தொடக்கத்தில் இருந்ததுபோல
இப்பொழுதும் எப்பொழுதும்
என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

ஓ என் இயேசுவே! 
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்கு சிறப்பாக உதவி புரியும்.

செபமாலை மறைபொருள்கள்

மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கட்கிழமை & சனிக்கிழமை)

  1. கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்தல் 
  2. மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல் 
  3. இயேசுவின் பிறப்பு. 
  4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தல் 
  5. காணாமற் போன இயேசுவைக் கண்டு மகிழ்தல் 

ஒளி நிறை மறை உண்மைகள் (வியாழக்கிழமை)

  1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப்  பெறுதல் 
  2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுதல்  
  3. இயேசு இறையரசை பறைசாற்றி, மனமாற்றத்திற்கு அழைத்தல் 
  4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைதல் 
  5. இயேசு இறுதி இரவுணவின்போது நற்கருணையை நிறுவுதல் 

துயர்  நிறை மறை உண்மைகள் (செவ்வாய்க்கிழமை & வெள்ளிக்கிழமை)

  1. இயேசு இரத்த வியர்வை சிந்துதல் . 
  2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிபடுதல் . 
  3. இயேசுவுக்கு  முள்முடி தரித்தல் . 
  4. இயேசு சிலுவை சுமந்து செல்லுதல் . 
  5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தல் 

 மாட்சி  நிறை மறை உண்மைகள் (ஞாயிற்றுக்கிழமை & புதன்கிழமை)

  1. இயேசு உயிர்த்தெழுந்தார் 
  2. இயேசுவின் விண்ணேற்றம்
  3. தூய ஆவியாரின் வருகை. 
  4. இறையன்னையின் விண்ணேற்பு. 
  5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பெறல் 

அதிதூதரான புனித மிக்கேலே, தேவதூதர்களான புனித கபிரியேலே, அப்போஸ்தலர்களான புனித இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே, அனைத்து புனிதர்களே, புனிதைகளே நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும், நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணிசெபத்தையும் உங்கள் தோதிரங்களோடே ஒன்றாகக் கூட்டி புனித தேவமாதாவின் திருப்பாதத்தில் பாதகாணிக்கையாக வைக்க உங்களைப் பிராத்தித்துக்கொள்கிறோம். ஆமென்.

மரியன்னை மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
தூய்மை நிறை மூவொரு இறைவா

புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவனின் புனித அன்னையே
கன்னியருள் சிறந்த கன்னியே
கிறிஸ்துவின் அன்னையே
இறையருளின் அன்னையே
தூய்மைமிகு அன்னையே
கன்னிமை குன்றா அன்னையே
அன்புக்குரிய அன்னையே
வியப்புக்குரிய அன்னையே
நல்ல ஆலோசனை அன்னையே
மீட்பரின் அன்னையே
திருஅவையின்  அன்னையே
அறிவுமிகு அன்னையே
போற்றுதற்குரிய அன்னையே
வல்லமையுள்ள அன்னையே
தயையுள்ள அன்னையே
நம்பிக்கைக்குரிய அன்னையே
நீதியின் கண்ணாடியே
ஞானத்திற்கு உறைவிடமே
எங்கள் மகிழ்ச்சியின் ஊற்றே
ஞானப் பாத்திரமே
மகிமைக்குரிய பாத்திரமே
பக்தி நிறை பாத்திரமே
மறைபொருளின் நறுமலரே
தாவீது அரசரின் கோபுரமே
தந்த மயமான கோபுரமே
பொன் மயமான ஆலயமே
உடன்படிக்கையின் பேழையே
விண்ணகத்தின் வாயிலே
விடியற்காலையின் விண்மீனே
நோயுற்றோரின் ஆரோக்கியமே
பாவிகளுக்கு அடைக்கலமே
துயருறுவோருக்குத் தேற்றரவே
கிறிஸ்தவர்களுடைய சகாயமே
வானதூதர்களின் அரசியே
முதுபெரும் தந்தையரின் அரசியே
இறைவாக்கினர்களின் அரசியே
திருத்தூதர்களின் அரசியே
மறைசாட்சிகளின் அரசியே
இறையடியார்களின் அரசியே
கன்னியரின் அரசியே
அனைத்துப் புனிதர்களின் அரசியே
அமல உற்பவியான அரசியே
விண்ணேற்பு பெற்ற அரசியே
திருச்சபையின் அரசியே
குருக்களின் அரசியே
குடும்பங்களின் அரசியே
அமைதியின் அரசியே
இந்திய நாட்டின் அரசியே

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே-3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்.

இறைவனுடைய புனித அன்னையே, இதோ உம்மிடம் சரணடைய ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களில் நாங்கள் வேண்டிக்கொள்ளும்போது நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப் பட்டவளுமாய் விண்ணகத்துக்கு உரியவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே, எல்லா ஆபத்துக்களினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும். 

இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்கும்படி இறைவனின் புனித  அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மன்றாடுவோமாக
இறைவா, முழுமனதுடன் உம் திருத்தாள் பணிந்திருக்கும் இக்குடும்பத்தைப் பார்த்து, எப்பொழுதும் கன்னியான புனித மரியாவுடைய வேண்டுதலினாலே, பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்து எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

கிருபை தயாபத்து செபம்
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே!
- இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 
செபிப்போமாக: சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.

புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டிய செபம் 
மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம். பெருமூச்n;சரிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கனியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே -ஆமென்

ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அச்சிஸ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -அருள்நிறைந்த (மூன்று முறை)

கடைசி வேண்டுதல்
இடைவிடாமல் துதிக்கப்பட யோக்கியமுமாய் மிகுந்த மதுரமுள்ள பூசிதமுமாயிருக்கிற பரம திவ்விய நற்கருணைக்கே எல்லா காலமும் முடிவில்லாத ஆராதனையும் துதியும் தோத்திரமும் உண்டாகக்கடவது.
சுவாமிக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.

ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்து எப்போதும் பரிசுத்த கன்னியுமாயிருக்கிற நமது ஆண்டவளுமாய்க் கொண்டாடப்பட்டவளுமாயிருக்கிற புனித தேவமாதாவினுடைய அமலோற்பவத்துக்கும் புனித சூசையப்பருடைய பாக்கியமான மரணத்துக்குமே தோத்திரமுண்டாகக்கடவது.
சுவாமிக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.

தேவ வரப்பிரசாதத்தின் தாயே, இரக்கத்துக்கு மாதாவே, புனித மரியாயே, எங்கள் மாற்றானுடைய சோதனையிலேயும், மரண நேரத்திலேயும், உமது திருக்குமாரனை வேண்டி எங்களைக் காக்கவும், ஆளவும், கைக்கொண்டு நடத்தவும் வேணுமென்று உமது திருப்பாதம் முத்திசெய்து உம்மை மன்றாடுகிறோம். 
ஆமென்


மரியாயின் சேனை சங்கிலி செபம் 

நிலவைப்  போல் அழகு வாய்ந்தவளாய் 
கதிரவனைப் போல் ஒளியுள்ளவளாய் 
போர் முனையில் அணிவகுத்து நிற்கும் படையைப்போல் 
அச்சம் தருகின்றவளாய் 
விடியற்காலைப் போல் அதோ 
எழுந்தருளி வருகின்றவர் யார்?


மரியே வாழ்க!


திருத்தந்தையின் கருத்துக்கள் நிறைவேறும் படியாக:

ஒரு விண் , ஒரு அருள், ஒரு திரி.

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்














34 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மாதாவின் செபம் மிகவும் அருமையாக பக்தியுடன் இருந்தது

    ReplyDelete
  4. இந்த அவசர உலகில், அன்றாட அலுவல்களுக்குப்பிறகு, செபிக்க நினைக்கும்போது, தங்களது முயற்சியால் அது எளிதான சுகமான அனுபவமாகிறது. நன்றி. அன்னை மரியா தங்களை அன்புசொரிந்து அரவணைத்துக் காப்பாராக.

    ReplyDelete
  5. மரியன்னை மன்றாட்டுடன் பொதுவான மன்றாட்டு மாலை உள்ளதா

    ReplyDelete
  6. துதி கண மகிமை இயேசுவுக்கு
    ஜெப மாலை அன்னை மரியாவுக்கு
    ஜெபம் செய்வோம்
    மரியே வாழ்க

    ReplyDelete
  7. Lovely thanks
    Stay blessed

    ReplyDelete
  8. அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே... . ஜெபத்தின் புதிய மொழிபெயர்ப்பு பகிர்ந்து உதவவும்

    ReplyDelete
    Replies
    1. புனித சிலுவை அடையாளத்தினாலே எங்கள் எதிரிகளிடமிருந்து எங்களை மீட்டருளும் எங்கள் இறைவா தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
      -ஆமென்

      Delete
  9. நன்றி நன்றி

    ReplyDelete
  10. Very powerful prayers
    Thank you 🙏🙌

    ReplyDelete
  11. May the most blessed Mother of God be praised and glorified by all

    ReplyDelete
  12. மரியே வாழ்க

    ReplyDelete
  13. very usefull

    ReplyDelete
  14. என் அம்மா மரியே வாழ்க.புனித சூசையே வாழ்க.புனிதர்,புனிதைகளே. கடவுளின் தூதர்களே வாழ்க.மூவொரு என் கடவுளுக்கு ஆராதனை,புகழும் மாட்சிமையும் என்றென்றும் எல்லா காலமும் உண்டாவதாக.ஆமென்.ஆமென்.ஆமென்.

    ReplyDelete
  15. மிகவும் அருமையான முறையில் ஜெபம் ஜெபிப்பதற்கு இறைவனிடம் ஆசி பெறுவதற்காக இந்த ஜெபமாலை தொகுத்துக் கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றிகள் பல உங்களையும் உங்கள் பணிகளையும் அன்னை மரியாள் பரிந்துரைத்து நம் கடவுளாகிய உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

    ReplyDelete
  16. மரியே வாழ்க 💙

    ReplyDelete
  17. இந்த ஜெபமாலை தமிழில் தொகுத்து தந்தூருக்கு மிக்க நன்றி நீங்கள் அனுப்பிய இந்த தொகுப்பு அனைவருக்கும் செபிப்பதற்கு உதவியாக இருக்கும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக மரியே வாழ்க

    ReplyDelete
  18. தினமும் ஜெபமாழை மற்றும் ஜெபங்களை தியானித்து மாதாவின் அருளை பெறுவதற்கு உதவிய தந்தைக்கு நன்றி

    ReplyDelete
  19. அருமையான ஜெபமாலைக்கு நன்றி. மரியே வாழ்க! இயேசுவுக்கே புகழ்!

    ReplyDelete
  20. ஒவ்வொரு வார்த்தையும் புத்தியில் ஏற்றி முழுமனதோடு செபமாலை செபிக்க இன்றிலிருந்து துவங்குகிறது எனது பக்தி முயற்சிகள்....இந்த செயலி அதற்கு முழுமையாக உதவும்.

    ReplyDelete
  21. மரியே வாழ்க🙏🙏

    ReplyDelete
  22. மிகவும் சிறப்பாக இருந்தது

    ReplyDelete
  23. மிகவும் சிறப்பு

    ReplyDelete
  24. Very useful so Thank you very much.

    ReplyDelete
  25. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி. நீங்கள் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  26. Very clear and Very useful to me...thank you so much...

    ReplyDelete
  27. GLORY TO HOLY TRINITY.

    ReplyDelete