அசிசி பிரான்சிஸ்



புனித அசிசி பிரான்சிஸின் ஆசீர் 

இறைவன் உமக்கு ஆசீர் அருள்க! 
அருள்வளமீந்து காத்தருள் புரிக!
தன் முகம் காட்டி  கருணை பொழிக!
அமைதியின் அரசர் அமைதி அருள்க!



பிறப்பு: 1181 / 1182
இடம்: அசிசி, இத்தாலி 
பெற்றோர்: பீட்டர் பெர்னடோனே & பீக்கா 
திருமுழுக்கு பெயர்: ஜியோவான்னி 
தந்தை தந்த புனைப்பெயர்: பிரான்செஸ்கோ 
மனமாற்றம்: 1201 - 1205
சிலுவையில் அறையுண்ட இயேசுவின் காட்சி: புனித தமியானோ சிற்றாலயம், அசிசி 
எளிய துறவிகள் (பிரான்சிஸ்கன்) சபை நிறுவுதல்: 1209
ஏழை கிளாரா சபை நிறுவுதல்: 1212
பொதுநிலையினர் பிரான்சிஸ்கன் இயக்கம் நிறுவுதல்: 1221
பிரான்சிஸ்கன் சபையின் நோக்கம்: ஏழ்மை, எளிமை, சகோதர கூட்டுவாழ்வு, செப தவ ஒருத்தல் வாழ்வு & நற்செய்தி அறிவிப்புபணி 
பிரான்சிஸ்கன் சபையின் முதல் (தாய்) இல்லம்: போர்சின்குலா 
 (புனித மரியா வானதூதர்களின் அரசி சிற்றாலயம்), அசிசி 
முதல் கிறிஸ்து பிறப்பு குடில் நிறுவுதல்:  1223, கிரேச்சியோ மலை
ஐந்து காயம் வரம் பெறுதல்: செப்டம்பர் 17, 1224, அல்வேர்னா மலை 
கதிரவன் கவிதை இயற்றுதல்: 1225
இறப்பு: அக்டோபர் 03, 1226
புனிதர் பட்டம்: அக்டோபர் 16, 1228
திருவிழா: அக்டோபர் 4, (அடக்கம் செய்யப்பட்ட நாள்)
பாதுகாவல்: சுற்றுச்சூழல், கத்தோலிக்க விசுவாசம், விலங்குகள், வணிகர், இத்தாலி நாடு 
சிறப்பு பெயர்கள்: மறு கிறிஸ்து, ஏழ்மையின் காதலன், ஏழைகளின் நண்பன், இயற்கையின் காவலன் 

புனித அசிசி பிரான்சிஸின் அமைதி  மன்றாட்டு


இறைவா அமைதியின் தூதுவனாய் என்னை பயன்படுத்தும்
பகையுள்ள இடத்தில் பாசத்தையும் 
மனவேதனையுள்ள இடத்தில் மன்னிப்பையும் 
ஐயமுள்ள சூழலில் விசுவாசத்தையும் 
அவநம்பிக்கையுள்ள இடத்தில் நம்பிக்கையையும் 
இருள் சூழ்ந்த இடத்தில் ஒளியையும் 
துயரம் நிறைந்த உள்ளத்தில் மகிழ்ச்சியையும் 
வழங்கிட எனக்கு அருள்புரியும்.  
ஓ! தெய்வீக குருவே ஆறுதல் பெறுவதைவிட ஆறுதல் அளிக்கவும் 
பிறர் என்னை புரிந்து கொள்ள விரும்புவதைவிட பிறரை புரிந்து கொள்ளவும் பிறருடைய அன்பை அடைய ஆசிபதைவிட பிறருக்கு அன்பை அளிக்கவும் அருள்வீராக! 
ஏனெனில் கொடுக்கும் பொழுது மிகுதியாக பெறுகிறோம் 
மன்னிக்கும் பொழுது மன்னிப்பை அடைகிறோம் 
இறக்கும் பொழுது முடிவில்லா வாழ்விற்குள் பிறக்கிறோம், 
எனவே சுயநலமற்ற வாழ்வில் அமைதியை அடைகிறோம். ஆமென். 

No comments:

Post a Comment