தொடக்க வழிபாடு
(குரு பீடத்திற்கு வந்து வணக்கம் செய்யும் போது, அனைவரும் எழுந்து நின்று வருகைப் பாடலைப் பாடுவோம்)
குரு : தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே.
மக் : ஆமென்.
குரு : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியின் தோழமையும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
மக் : உம்மோடும் இருப்பதாக.
மன்னிப்பு வழிபாடு
(ஞாயிற்றுக் கிழமைகளில்)(கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவூட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் குரு தண்ணீரை மந்திரித்துத் தெளிக்கிறார்.)
குரு: அன்புமிக்க சகோதரரே, நம் திருமுழுக்கின் நினைவாக நம்மீது தெளிக்கப்படும் இத் தண்ணீரை ஆசீர்வதித்தருளுமாறு நம் இறைவனாகிய ஆண்டவரை கெஞ்சி மன்றாடுவோமாக. அவரே நமக்கு உதவியளித்து, நாம் அன்று பெற்றுக்கொண்ட தூய ஆவியாரிடம் என்றும் உண்மையுடன் இருக்க நமக்கு அருள்வாராக.
(சற்று நேர மௌனத்துக்குப் பின்) என்றும் வாழும் எல்லாம் வல்ல இறiவா, உயிரின் ஊற்றும் தூய்மைக்கு தொடக்கமுமான தண்ணீரின் வழியாக மக்கள் புனிதமடைந்து, முடிவில்லா வாழ்வின் கொடையைப் பெற வேண்டுமென்று திருவுளமானீர். உமது நாளாகிய இன்று நாங்கள் இத்தண்ணீரினால் உமது அருட்காவலைப் பெற விரும்புகின்றோம். எனவே ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். இத்தண்ணீரை ஆசீர்வதித்தருளும். உயிரளிக்கும் உமது அருளின் ஊற்றினை எம்முள் புதுப்பித்து, இத்தண்ணீரினால் எங்கள் உடலையும் உள்ளத்தையும் தீங்கனைத்திலிருந்து காத்தருள்வீராக. இவ்வாறு, நாங்கள் தூய உள்ளத்துடன் உம்மை அணுகி வரவும், உமது மீட்பை பெற்றுக் கொள்ளவும் தகுதி பெற வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக் : ஆமென்.
(தீருநீரில் உப்பைக் கலக்க விரும்பினால்)
எல்லாம் வல்ல இறைவா, தண்ணீர் வளம் பெற அதில் உப்பிட வேண்டுமென்று இறைவாக்கினர் எலிசேயு வழியாகக் கற்பித்தீரே; இந்த உப்பை பரிவன்புடன் ஆசீர்வதித்தருள உம்மைத் தாழ்மையாய் வேண்டுகிறோம். ஆண்டவரே உப்புக் கலந்த இத்தண்ணீர் தெளிக்கப்படும் இடமெல்லாம் எதிரியின் தாக்குதல் அனைத்தும் தோல்வியுறச் செய்வீராக. மேலும் உம்முடைய தூய ஆவியார் எமுந்தருளி எங்களை இடையராது பாதுகாக்க வேண்டுமென்றும் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக் : ஆமென்.
(குரு திருநீரைத் தெளிக்கும்போது கீழ்கண்ட பாடலைப் படலாம்.)
ஆண்டவரே, ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர் நானும் தூய்மையாவேன்
நீரே என்னைக் கழுவ நானும் உறைபனிதனிலும் வெண்மையாவேன் இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கு ஏற்ப என்மேல் இரக்கம் கொள்வீர் பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய்ப் பெருக ஆதியில் இருந்தது போல இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்.
-----
(பாஸ்கு காலத்தில் மட்டும்)
தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன் - அல்லேலூயா
அந்தததண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்றுக் கூறுவர்:
அல்லேலூயா, அல்லேலூயா.ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய் பெறுக ஆதியில் இருந்ததுபோல் இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்
சாதாரண நாட்களில்
குரு : சகோதர சகோதரிகளே திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம். ( சிறிது மௌனத்துக்குப் பிறகு )
எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் . என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். ( பிழை தட்டிக் கொண்டு ) என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே ஆகையால், எப்போதும் கன்னியான தூய கன்னிமரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.
குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!
மக் : ஆமென்.
குரு : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மக் : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
குரு : கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
மக் : கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
குரு: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மக் : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
வானவர் கீதம்:
(திருநாட்களில்)
உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக! பூவுலகில் நல் மனத்தோருக்கு அமைதியும் ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம். உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மகிமைப்படுத்துகின்றோம். உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய சர்வேசுரா வானுலக அரசரே, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா.
ஏக சுதனாய் செனித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே, பிதாவின் சுதனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும், உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும், பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே எங்கள் மேல் இரக்கமாயிரும், ஏனெனில் இயேசுக்கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர். நீர் ஒருவரே ஆண்டவர். நீர் ஒருவரே உன்னதர் பரிசுத்த ஆவியோடு, பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே. - ஆமென்.
(பாடல் திருப்பலியில்)
உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக.
உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம்.
உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்.
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே.
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே.
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.
ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.
தந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர்.
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்.
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்.
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே -ஆமென்
சபை மன்றாட்டு :
குரு :செபிப்போமாக ஆண்டவரே, மகிழ்வோடு உம்மைத் தேடி வந்துள்ள எங்களுக்கு உம் திருமுகத்தைக் காட்டியருளும். எங்கள் விசுவாசத்தையும், நம்பிக்கையையும், அன்பையும் வளரச் செய்தருளும். நீர் வாக்களிப்பதை நாங்கள் பெற்றுக் கொள்ளுமாறு, நீர் கட்டளையிடுவதை விரும்பி நிறைவேற்றுவோமாக. உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக் : ஆமென்.
அருள்வாக்கு வழிபாடு
முதல் வாசகம்
வாசகர்: இது ஆண்டவரின் அருள் வாக்கு!
மக் : இறைவா உமக்கு நன்றி!
தியானப்பாடல் / திருப்பாடல்
இரண்டாம் வாசகம்
வாசகர்: இது ஆண்டவரின் அருள் வாக்கு!
மக் : இறைவா உமக்கு நன்றி!
நற்செய்தி திருவுரை:
( இறைவன் தம் திருமகன் வழியாகப் பேசுகிறார்.)
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்: உம்மோடும் இருப்பாராக.
குரு: புனித லூக்கா/மத்தேயு/யோவான்/மாற்கு எழுதிய பரிசுத்த நற்செய்தியிலிருந்து வாசகம்.
மக்: ஆண்டவரே உமக்கு மகிமை.
---நற்செய்தி முடிவில் ---
குரு : இது கிறிஸ்துவின் நற்செய்தி !
மக் : கிறிஸ்துவே உமக்குப் புகழ்!
மறைவுரை
( மறைவுரை முடிந்ததும், மெனமாகச் சற்று நேரம் தியானிக்கவும்.)
விசுவாச அறிக்கை (ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும்):
விசுவாச அறிக்கை (பாடல் திருப்பலியில்) :
வானமும் பூமியும் படைத்தவராம் கடவுள் ஒருவர் இருக்கின்றார்
தந்தை சுதன் தூய ஆவியுமாய் தன்னில் உறவுடன் வாழ்கின்றார்.
பரிசுத்த ஆவியின் வல்லமையால் திருமகன் மரியிடம் மனுவானார்.
மனிதரைப் புனிதராய் மாற்றிடவே புனிதராம் கடவுள் மனிதரானார்.
பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார் கல்லறை ஒன்றில் அடக்கப்படடார்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் மரணத்தின் மீதே வெற்றி கொண்டார்.
பரலோகம் வாழும் தந்தையிடம் அரியணை கொண்டு இருக்கின்றார்.
உலகம் முடியும் காலத்திலே நடுவராய் திரும்பவும் வந்திடுவார்.
பரிசுத்த ஆவியை நம்புகிறோம் பாரினில் அவர் துணை வேண்டிடுவோம்
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்றுப் பரிகார வாழ்வில் இணைந்திடுவோம்.
திருச்சபை உரைப்பதை நம்புகிறோம் புனிதர்கள் உறவை நம்புகிறோம்
சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை விசுவாசப் பொருளாய் நம்புகிறோம் - ஆமென்.
விசுவாசிகளின் மன்றாட்டு:
குரு: அன்பு மிக்க சகோதர சகோதிரிகளே! கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கூறிய நம் ஆண்டவரிடம், இப்போது நம் தனிப்பட்ட தேவைகளுக்காக மட்டுமன்றி, நம் தாய் திருச்சபைக்காகவும், தாய் திருநாட்டிற்காகவும், உலக சமாதானத்திற்காகவும், நமது வேண்டுதல்களை எடுத்துச் சொல்லி மன்றாடுவோம்.
(ஒவ்வொரு மன்றாட்டின் முடிவிலும்)
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
குரு: நமது தனிப்பட்ட தேவைகளுக்காக சற்று நேரம் மௌனமாக செபிப்போம்....
குரு: எங்கள் புகலிடமும் பலமுமாகிய இறைவா! எங்களுடைய பக்தியுணர்வைத் தூண்டி எழுப்புகின்றவர் நீரே ! உம்முடைய அன்பு மக்களின் உருக்கமான மன்றாடுக்களுக்கு தயவுடன் செவிமடுத்து, அவற்றை விரைவாகப் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம் - ஆமென்.
நற்கருணை வழிபாடு
காணிக்கைப் பொருட்களைத் தயாரித்தல் மக்கள் காணிக்கைப் பொருட்களைச் சேகரிக்கும் போதும், பீடத்துக்கு எடுத்துச் செல்லும் போதும் காணிக்கைப் பாடலை பாடுகின்றனர்.
குரு : (அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.
மக் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.
குரு: (இரசத்தில் தண்ணீர் கலக்கும் போது மனதில் சொல்லத்தக்க செபம்: கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத்திருவுளமானார். இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.)
குரு : ( இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.
மக் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.
குரு தலைகுனிந்து: எம் இறைவனாகிய ஆண்டவரே, தாழ்மையான மனத்தோடும் நொறுங்கிய உள்ளத்தோடும் வருகின்ற எங்களை ஏற்றருளும். நாங்கள் இன்று உம் திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.)
( குரு கை கழுவும் போது : ஆண்டவரே குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் தூய்மைப்படுத்தும்.)
குரு : சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள்.
மக் : ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
காணிக்கை மன்றாட்டு:
குரு: எங்கள் இரக்கம் நிறைந்த தந்தையே, நீர் எங்களுக்குக் கொடுத்தவைகளையே நாங்கள் உமக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றோம். இக்காணிக்கைகளை ஏற்றுஎங்களுக்கு உமது மீட்பைத் தந்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்: ஆமென்.
நற்கருணை மன்றாட்டு
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக் : உம்மோடும் இருப்பாராக.
குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
மக் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
மக் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே தூயவரானதந்தையே என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக என்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும். எங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும்.
தூயவரான தந்தையே, உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியாகும், உம்மை மகிகைப் படுத்துவது உண்மையிலேயே நீதியாகும். ஏனெனில் நீர் ஒருவரே உயிருள்ள மெய்யான கடவுள். காலங்களுக்கெல்லாம் முன்னதாகவே இருக்கின்றீர். அணுக முடியாத ஒளியில் வாழ்கின்ற நீர் என்றென்றும் நிலைத்திருக்கின்றீர். நீர் ஒருவரே நல்லவர். ஊயிரின் ஊற்றாகிய நீர் யாவற்றையும் படைத்து, படைப்புகளை நலன்களால் நிறைத்து, உமது ஒளியின் மாட்சியால் மக்களை மகிழ்விக்கத் திருவுளமானீர்.
ஆகவே, வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்று, இரவும் பகலும் உமக்கு ஊழியம் புரிகின்றனர். உமது திருமுகத்தின் மாண்பினைக் கண்டு மகிழ்ந்து, உம்மை இடையறாது புகழ்கின்றனர்;. அவர்களோடு நாங்களும், எங்களோடு பூவுலகப் படைப்புகள் அனைத்தும், உமது திருப்பெயரை அக்களிப்புடன் புகழ்ந்து பாடுவதாவது :
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவுலகின் தேவனாகிய ஆண்டவர் வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர் பெற்றவர் - உன்னதங்களிலே ஓசானா உன்னதங்களிலே ஓசானா.
(பாடல்)
தூயவர் தூயவர் தூயவர்! மூவுல கிறைவனாம் ஆண்டவர்
வானமும் வையமும் யாவும்னும் மாட்சிமையால் நிறைந் துள்ளன.
உன்னதங்களிலே ஓசான்னா! ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே
உன்னதங்களிலே ஓசான்னா! உன்னதங்களிலே ஓசான்னா!
நற்கருணை மன்றாட்டு
வானக தந்தையே நீ மெய்யாகவே தூயவர் புனித்ததிற்கெல்லாம் ஊற்று ஆகவே உம்முடைய தூய ஆவியைப் பொழிந்து இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்த வேண்டுமென மன்றாடுகிறோம். இவ்வாறு எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட மனமுவந்து கையளித்தபோது அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியபோது:
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே உணவு அருந்தியபின் கிண்ணத்தை எடுத்து உமக்கு நன்றி செலுத்தி வாழ்த்துரைத்து தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியவதாவது :
அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் ஏனெனில் இது புதிய நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம். இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும. இதை என் நினைவாக செய்யுங்கள்.
குரு : இது நம் விசுவாசத்தின் மறைபொருள்
மக் : ஆண்டவரே, தேவரீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம், உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம்
ஆகவே இறைவே நாங்கள் கிறிஸ்துவின் இறப்பையும் உயிர்ப்பையும் நினைவு கூர்ந்து வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக் கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்வகளென எங்களை ஏற்றுக் கொண்டீர். எனவே உமக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவி ஒன்று சேர்க்க வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.
இறைவா உலககெங்கும் பரவியிருக்கும் உமது திருச்சபையை சிறப்பாக எங்கள் திருத்தந்தை .... எங்கள் ஆயர் .... ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரையும் நினைவுகூர்ந்தருளும் இவர் திருமுழுக்கின் வழியாக உம் திருமகனுடைய சாவில் அவரோடு ஒன்றாய் இணைக்கப்பட்டது போல் உயிர்ப்பிலும் அவரைப் போல் இருக்கச் செய்தருளும் மேலும் உயிர்த்தெழும் நம்பிக்கையுடன் இறந்து போன எங்கள் சகோதரர சகோதரிகளையும் இறந்தோர் அனனவரையும் நினைவுகூர்ந்து ஒளிமிக்க உம் திருமுன் ஏற்றுக்கொள்ளும் எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். இறைவனின் கன்னித்தாயன மாட்சிமிக்க மரியாள், அவருடைய கணவராகிய புனித சூசையப்பர், புனித அப்போஸ்தலர் இவ்வுலகில் உமக்குகந்தவராய் இருந்தவர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலையான வாழ்வில் தோழமை கொண்டு உம் திருமகன் கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரமருள உம்மை மன்றாடுகிறோம்.
இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே,தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.
மக் : ஆமென்.
திருவிருந்து வழிபாடு :
குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.
மக் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.
குரு : ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக! நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.
மக் : ஏனெனில், அரசம்,வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே!
குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்' என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
மக் : ஆமென்.
குரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
மக் : உம்மோடும் இருப்பதாக.
குரு : ஒருவருக்கொருவர் சாமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!
(குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது)நம் ஆண்டவர் யேசுகிறிஸ்துவின் திருஉடலும் இரத்தமும் இங்கு ஒன்றாய் கலந்து இதை உட்கொள்ளும் நமக்கு முடிவில்லா வாழ்வளிப்பதாக.) மக் : உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ,எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
(பாடல் திருப்பலியில்)
உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எம் மேல் இரக்கம் வையும்
உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எம் மேல் இரக்கம் வையும்
உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எமக்கு அமைதி அருளும்.
(குரு தலை வணங்கி:ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீhப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையும் உடலையும் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியும்)
குரு : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்!
மக் : ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.
(கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
(கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
குரு : கிறிஸ்துவின் திருவுடல்
நன்மை வாங்குபவர் : ஆமென்.
திருவிருந்து பாடல்:
(சிறிது நேரம் மௌனம் காத்து அல்லது நன்றி சங்கீதம் அல்லது பாடலைப் பாடி ஆண்டவருக்கு நன்றி கூறுக.)
குரு : செபிப்போமாக. இறைவா, உம் திருமகன் வழியாக நீர் எங்களுக்கு அளித்த மீட்பை இத்திருவெளிபாட்டில் நாங்கள் கொண்டாடி மகிழ்ந்தோம், இந்த அனுபவத்தின் ஆற்றலால், சமுதாயத்தில் நிலவும் நன்மை தீமைகளைப் பகுத்தாயும் தெளிந்த பார்வை பெறவும், உம்மீது மாறா அன்பு கொண்டு, சமுதாய முன்னேற்றத்திற்காக உழைக்கவும் வரந்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக் : ஆமென்.
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக் : உம்மோடும் இருப்பாராக.
குரு : எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக!
மக் : ஆமென்.
குரு : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று.
மக் : இறைவா உமக்கு நன்றி.
Praise the lord
ReplyDeletePls update latest one
ReplyDeleteHelpful to attend the
ReplyDeletemass
Please Use www:tamilbible.com for the updated new Tamil mass
ReplyDeleteKulandairaj Madhavaram Chennai