செபங்கள் (பொது)

இயேசுவின் திரு இதயத்தை நோக்கிய செபங்கள்

நாள்தோறும் இதய ஆண்டவரை நோக்கிய மன்றாட்டு
ஓ, இயேசுவின் திரு இதயமே! உமது அரசு வருக! அனைத்து இன மக்களுக்கும் நீர் அரசாக இருப்பீராக!உம்கு பிறமாண்க்கமாய் இருப்பவர்களுக்கு மாத்திரம் அல்ல, ஊதாரியைப்போல் உம்மை விட்டு விலகிப் போயிருப்பவர்களுக்கம் நீர் உத்தம அரசாராய் இருப்பீராக!
அமைதியின் அரசியாகிய புனித மரியாவின் மாசற்ற இதயத்தின வழியாக, எங்கள் நாட்டில் உமது அரசை நிறுவீராக! எங்கள் குடும்பங்களினுள் நுழைந்து, அவற்றை உமக்கே சொந்தமாக்கியருளும். இவ்விதம், உலகின் கோடிமுனை தொடங்கி மறகோடிமுனை மட்டும் ''நம் அரசாரகிய இயேசு கிருஸ்துவின் திரு இதயம் வாழ்த்தப்படுவதாக! என்றென்றைக்கும் அத்திரு இதயம் புகழப்படுவதாக!'' என்று ஒரே குகொடிராலியாய் இருப்பதாக! -ஆமென்.
இயேசுவின் திரு இதயத்தை நோக்கி மன செபங்கள்
இயேசுவின் திரு இதய அன்பே, உமது அன்பு இதயத்தில் பற்றியெறிய செய்தருளும்.
இயேசுவின் திரு இதய த் திடமே, என்னை திடப்படுத்தியருளும்
இயேசுவின் திரு இதய இரக்கமே, எனக்கு மன்னிப்பளித்தருளும்
இயேசுவின் திரு இதயப் பொருமையை, என் குறைகளை பொருத்தருளும்,
இயேசுவின் திரு இதய அரசே, என்னை உம் வசப்படுத்தியருளும்
இயேசுவின் திரு இதய சித்தமே, என்னை ஆட்கொள்ளும்
இயேசுவின் திரு இதயப் பற்றுதலே, என் இதயத்தைத் தகனப்பலியாக்கியருளும்
அமல உற்பவியான கன்னிமரியே, இயேசுவின் திரு இதயத்திடம் எங்களுக்காக வேண்டிகொள்ளும்.
இயேசு நாதருடைய திரு இதயத்துக்குத தன்னை ஒப்புக் கொடுக்கும் செபம்
(புனித மார்கரீத்து மரியா)
இயேசு நாதருடைய திரு இதயத்துக்கு எளியேன்(பெயர்) என்னையே கையளித்து ஒப்புக் கொடுக்கிறேன். என்னில் உள்ளதும் எனக்கு உள்ளதுமான அனைத்தும் அத்திரு இதயத்தை அன்ப செய்து புகழ்ந்து வணங்கும்படியாக, என்னை, என் உயிரை, என் செயல்களை, எனக்கு நேரிடும் இன்ப துன்பங்களையெல்லாம் அந்த திரு இதயத்துக்குப் பாதகாணிக்கையாக்குகிறேன். திவ்விய இதயத்துக்கே நான் முழுவதும் சொந்தமாய் இருப்பேன். அதற்கு வருத்தம் தரக்கூடிய அனைத்தையும் முழுமனத்தோடு வெறுத்துத் தள்ளுவேன். திரு இதயத்தின் மீது எனக்குள்ள அன்பை எண்பிக்க இயன்றதெல்லாம் செய்வேன். இதுவே என் உறுதி மாறாத தீர்மானம்.
இனிய திரு இதயமே! நீரே என் அன்புக்கெல்லாம் முற்றும் உரியவர், நீரே என் உயிரின் ஒரே காவல். என் மீட்பில் தளராத நம்பிக்கை நீரே. நீரே என் பலவீனத்தைப் போக்கும் மருந்து. என் குற்றங் குறைகளைப் பரிகரிப்பவர் நீரே. என் உயிர் பிரியும் வேளையில் எனக்கு நிலையான அடைக்கலம் நீரே. ஓ, தயாளம் நிறைந்த இயேசுவின் திரு இதயமே! உம் பரம தந்தையின் சமூகத்தில் நீரே எனக்காக மன்றாடி, அவருடைய நீதியின் கோபாக்கினை என்மேல் விழாதபடி தடுத்தருளும். ஓ, அன்புப் பெருக்கான இயேசுவின் திரு இதயமே! என் பலவீனத்தை எண்;ணி அஞ்சும் அதே வேளையில், உம் தயாளத்தையும் எண்ணி என் நம்பிக்கை முழுவதையும் உம் பேரில் வைக்கிறேன்.
எனவே, உமக்கு விருப்பம் அல்லாதது எதுவும் என்னிடம் இருந்தால், அதை உமது அன்புத் தீயில் சுட்டெரித்தருளும். நான் உம்மை ஒரு போதும் மறவாமலும், உம்மைவிட்டுப் பரியாமலும் இருக்க, உம் தூய அன்பை என் இதயத்தில் பதிப்பித்தருளும். உம் அடிமையாக வாழ்வதும் இறப்பதுமே என் ஓரே பேறாக எண்ணியிருப்பதால், என் பெயரை உம் திரு இதயத்தில் எழுதி வைத்தருளக் கெஞ்சி மன்றாடுகிறேன் - ஆமென்.

இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற செபம்:
இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும், சொல்லமுடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்.
நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும்.
தவறி எங்களில் எவரேனும் உமது இருதயத்தை நோகச்செய்திருந்தால் அவர் குற்றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.
இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருந்தாப்பியர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு, தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.
இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறுபிள்ளைகளை எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும் வளரச்செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து, மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும். - ஆமென்
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.

இயேசுவின் திரு இருதயத்திற்கு நிந்தைப் பரிகார செபம்:
எங்கள் திரு மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் திரு இதயமே! நாங்கள் நீசப் பாவிகளாய் இருந்தாலும், உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உம் திருமுன் பயபக்தியுள்ள வணக்கத்துடனே நெடுஞ்சாண்கடையாய் விழுந்து, நீர் எங்கள் மீது இரக்கமாயிருக்க மன்றாடுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றி கெட்டத்தனத்தையும் நினைத்து வருந்துகிறோம். அவைகளை அருவருத்துஎன்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களாலே ஆன மட்டும் அவைகளுக்காக கழுவாய் செய்யும் துணிகிறோம்.
ஆண்டவரே! எளியோர் உமக்குச் செய்த குற்ற துரோகங்களுக்காகவும், பொல்லாத மக்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும் மிகுந்த மனத்துயர் கொண்டு, அவற்றை நீர் பொறுக்கவும், அனைவரையும் நல்வழியிலே திருப்பி மீட்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம் திரு இதயத்துக்குச செய்யப்பட்ட எல்லா நிந்தை அவமான துரோகங்களுக்கும் கழுவாயாக எளியோரின் தொழுகை வணக்கத் துதிகளுடன் விண்ணுலகத் தூதர்களும் புனிதர்களும் செலுத்தும் தொழுகைப் புகழ்ச்சிகளையும், மண்ணுலகில் புண்ணியவாளர் செலுத்தும் துதிகளையும் மிகுந்த தாழ்ச்சி, பணிவுடனே உமக்கு காணிக்கையாக்குகிறோம்.
எங்கள் திவ்விய இயேசுவே, எங்கள் ஒரே நம்பிக்கையே, எளியோர் எங்களை முழுவதும் இன்றும் என்றும் உமது திரு இதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இறைவா! எங்கள் இயதங்களை கைவசப்படுத்தி, தூய்மையாக்கி, புனிதமையச் செய்தருளும், எங்கள் வாழ்வின் இறுதிவரை எங்களை எல்லா எதிரிகளின் சூழ்ச்சிகளினின்றும் காப்பாற்றும். மாந்தர் அனைவருக்காவும் சிலுவை மரத்தில் நீர் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளை நிறைவேற்றியருளும் - ஆமென்.

இயேசுவின் திருமுகத்தைப் குறித்து 
(பாப்பரசர் 9-ஆம் பத்திநாகர் இயற்றிய செபம்)
இனிய இயேசுவே! எங்களை உமது கிருபைக் கண்களால் நோக்கியருளும். அன்று வெரோணிக்கம்மாளை கிருபாகடாட்சமாய் பார்த்தருளினது போல எங்களில் ஒவ்வொருவரையும் தயவாய் பார்த்தருளும். உமது பிரத்தியட்ச தரிசனத்தை அடியோர்கள் இச் சரீரக் கண்களால் காண அபாத்திரவான்களாகையால் என் இருதயத்தை நோக்கி உமது திருமுகத் தரிசனத்தால் திருப்பியருளும். இந்த திவ்விய தரிசனத்தால் என் இருதயம் உற்சாகமடைந்து இப்பிரபஞ்ச சீவ ஞானயுத்தத்தில் கிருபாகடாட்ச ஊரணியால் அடையச் செய்தருளும் சுவாமி -ஆமென். ஒரு பர. அரு. பிதா.
செபிப்போமாக:
சமஸ்த விசுவாசிகளின் சிருஷ்டிகரும் இரட்சகருமாயிய இறைவா! உம்முடைய மகிமை பூலேகமெங்கும் நிறைந்திரு;கிறது. உமது அடியானுக்கு பாவப் பொறுத்தல் தந்து என் அவசரங்களில் வேண்டிய வரங்களைப் அடையச் செய்தருளும் சுவாமி. -ஆமென்.

திரு இதய நவநாள்
"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்" என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய இயேசுவே, தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக்கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக்கொள்ளும் மன்றாட்டு ஏதென்றால்....
சகல நன்மைகளுக்கும், பேறுபலன்களுக்கும் வற்றாத ஊரணியாகிய தேவரீருடைய திருஇருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன். தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்தாலன்றி வெறெங்கே நான் இதைத் தேடப்போகிறேன். தாமே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறேங்கே நான் தட்டிக் கேட்கப்போகிறேன். ஆகையால் என் நேச இயேசுவின் திரு இருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஓடிவந்தேன். இக்கட்டு இடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே; சோதனைக் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். -பர. அருள். பிதா.
தேவரீர் சித்தம் வைத்தாலே போதும். என் செபம் பிராத்தனைகள் அனுகூலமாகும். திவ்விய இயேசுவே, தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுவதும் அபாத்திரவான்தான், ஆகிலும் நான் இதனாலே அதைரியப்பட்டு பின்னடைந்து போவேனல்ல; தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தை தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் எங்களை நோக்கியருளும். என் நிர்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கு இரங்காமற் போகாது.
இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே! தேவரீரை நான் வாழ்த்தி வணங்கி போற்றி புகழ்ந்து சேவிக்க நான் ஒருகாலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே! ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதய தீர்மானத்திற்க முழுவதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியை கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேள்ற ஆசையாயிருக்கிறேன். -ஆமென்

இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்:
ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்; உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
சுவாமி ! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை; வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழிநத்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார்பேரிலும் இரக்கமாயிரும்; இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக; இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக; எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும், இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமி! முற்காலத்தில் தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக்கள்களைத் திருப்பியருளும்! உமது திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக் கடவதாக.
ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. - ஆமென்.

திரு இருதய மன்றாட்டுமாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்
விண்ளகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய ஆவியாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
என்றும் வாழும் பிதாவின் சுதனாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பரிசுத்த கன்னித்தாயின் உதிரத்தில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இறைவனின் இல்லமும் விண்ணக வாசலுமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அன்புத் தீ சுவாலித்தெரியும் சூளையான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
நீதியும் நிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப் பெற்ற இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எல்லா ஆராதனைப் புதழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மைய இடமுமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இறைத்தம்மை முழுமையாக தங்கி வழியும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் போற்றி மகிழச் செய்யும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
நித்திய சகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவை அளிக்கும் தாராளமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்தின இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
மரணம் வரையும் கீழ்படிந்திருந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சர்வ ஆறுதல் அனைத்தின் ஊற்றாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் சமாதானமும் ஒற்றுமையின் இணைப்புமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பாவங்களுக்குப பலியான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உம்மிடத்தில்; நம்பிக்கை வைக்கிறவர்களுடைய மீட்பரான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எல்லா புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்களைத் தயை செய்து மீட்டருளும்.
முதல்வர் - இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே
துணைவர் - எங்கள் இருதயம் உமது இருதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்.
செபிப்போமாக:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகன் இருதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி, மன்னிப்பளித்தருளும்.உம்மோடு தூய ஆவியின் ஐக்கியத்தில் என்றேன்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.


மரியன்னையை நோக்கிய செபங்கள்

மங்கள வார்த்தை செபம்
அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சியசிஷ்ட மரியாயே,
சர்வேசுவரனுடைய மாதாவே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும்
வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
மங்கள வார்த்தை செபம்
(புதிய வடிவம்)
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க!
ஆண்டவர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசி பெற்றவரே.
தூய மரியே,
இறைவனின் தாயே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும்
வேண்டிக்கொள்ளும். - ஆமென்.


புனித  பெர்னார்டின் செபம்
மிகவும் இரக்கமுள்ள தாயே!
உமது அடைக்கலமாக ஓடிவந்து,
உம்முடைய உபகார சகாயங்களை
இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும்
உம்மால் கைவிடப்பட்டதாக 
ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை
என்று நினைத்தருளும்.
கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே!
தயையுள்ள தாயே! 
இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு
உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம்.
பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள்
உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம்.
அவதரித்த வார்த்தையின் தாயே
எங்கள் மன்றாட்டைப் புறக்கனியாமல்
தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே
ஆமென்.
ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - அருள்நிறைந்த (மூன்று முறை)
பரலோகத்துக்கு இராக்கினியே வாழ்க!
பரலோகத்துக்கு இராக்கினியே வாழ்க! :சம்மனசுக்களுக்கு தலைவியே வாழ்க! உலகத்தைப்பிராகாசிக்கச் செய்யவந்த பரஞ்சோதியாகிய கர்த்தர் எழுந்தருளின திருவாசலே வாழ்க! தேவ கனியைத் தந்த தூய்மையான திவ்விய பூங்கொடியே வாழ்க! சகல கன்னியர்களிலும் மகிமை பொருந்திய அதிசவுந்தரிய ரூபலாவண்ய கன்னிகையே களிகூறும். ஆராதனைக்குப் பாத்திரமான உம்முடைய திருக்குமாரனிடத்தில் எங்கள் பாவப்பொறுத்தலுக்காக மன்றாடும்.
முதல் - அர்ச். கன்னிகையே, நான் உம்மை ஸ்துதிக்கக் கிருபை செய்தருளும்.
துணை - உம்முடைய சத்துருக்களை வெற்றி கொள்ள எனக்கு பாலத்தைத் தந்தருளும்.
மன்றாடுவோமாக: தயாபர சர்வேசுரா சுவாமீ! எங்கள் துர்ப்பலத்துக்கு உமது திருச்சரணக் காவலைக் கட்டளையிட்டருளும், தேவமாதாவை நினைத்துக் கொண்டாடுகிற நாங்கள் அந்தத் திவ்விய தாயருடைய வேண்டுதல் உதவியால் பாவமாகிய மரணத்திலிருந்து உயிர்க்கும்படிக்கு அநுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுகிறிஸ்து நாதருடைய திரு முகத்தைப்பார்த்து எங்களுக்குத் தந்தருளும். - ஆமென்.

பொதுவான மூவேளை செபம்
ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார்.
மரியா தூய ஆவியாரால் கருவுற்றார். (1 மங்கள வார்த்தை செபம்)
இதோ ஆண்டவரின் அடிமை.
உமது சொற்படியே எனக்கு நிகழட்டும். (1 மங்கள வார்த்தை செபம்)
வாக்கு மனிதர் ஆனார்.
நம்மிடையே குடிகொண்டார். (1 மங்கள வார்த்தை செபம்)
கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி /
இறைவனின் தூய அன்னையே / எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மன்றாடுவோமாக: இறைவா! / உம் திருமகன் மனிதர் ஆனதை / உம்முடைய வானதூதர் வழியாக / நாங்கள் அறிந்திருக்கிறோம். / அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் / நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற / உமது அருளைப் பொழிவீராக./ எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம்./ ஆமென்.
பாஸ்கா கால மூவேளை செபம்
விண்ணக அரசியே! மனம் களிகூரும். அல்லேலூயா.
ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கும் பேறு பெற்றீர். அல்லேலூயா.
தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா.
எங்களுக்காக இறைவனை மன்றாடும். அல்லேலூயா.
கன்னி மரியே! அகமகிழ்ந்து பூரிப்பு அடைவீர். அல்லேலூயா.
ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா.
மன்றாடுவோமாக: இறைவா / உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் / உலகம் மகிழத் திருவுளம் கொண்டீரே! / அவருடைய அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் / நாங்கள் நிலை வாழ்வின் பெரு மகிழ்வில் பங்கு பெற / அருள் புரியும். / எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்.
மரியாவின் பாடல்
ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகைக் கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்;
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.

கிருபை தயாபத்து செபம்
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே!
- இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
ஜெபிப்போமாக சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.

3 comments: